ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி – 200 பேர் காயம்
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் மக்கள் திரள் மீது ஒரு கார் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
அமெரிக்கா, சௌதி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளன. என்ன நடந்தது?
ஜெர்மனியின் மேக்டபெர்க் நகரில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தைக்குள் வெள்ளிக்கிழமை ஒரு கார் தாறுமாறாக ஓடியது. மக்கள் கூட்டத்திற்குள் சுமார் 400 மீட்டருக்கு கார் சென்றதாக AFP முகமை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் குழந்தை உட்பட குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஜெர்மனி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக குறைந்தது 60 பேர் காயம் என கூறப்பட்டிருந்தது.
சம்பவம் நடந்த இடத்தை ஜெர்மன் சான்சலர் ஓலாப் ஸ்ஷால்ஸ் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இது நடப்பது முதல் முறை அல்ல. இது பல ஆண்டுகளாக நாம் கையாளும் பிரச்னை. பொதுமக்கள் பாதுகாப்பை எவ்வாறு உறுதிசெய்கிறோம் என்பது உட்பட நமது கொள்கைகளை எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார். மேலும், ஒட்டுமொத்த ஜெர்மன் மக்களுக்கும் துணை நிற்பதாக தெரிவித்தார்.
முழு விவரம் காணொளியில்…
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.