• Tue. Mar 4th, 2025

24×7 Live News

Apdin News

ஜேம்ஸ் ஹாரிசன்: தனி ஒருவராக 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஆஸ்திரேலியர் – யார் இவர்?

Byadmin

Mar 4, 2025


ஆஸ்திரேலியா, ரத்த தானம், பிளாஸ்மா

பட மூலாதாரம், Australian Red Cross Lifeblood

  • எழுதியவர், கெல்லி என்ஜி
  • பதவி, பிபிசி செய்திகள்

உலகில் மிக அதிக அளவில் ரத்த தானம் செய்தவர்களில் ஒருவர் காலமானார். அவர் தனது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியுள்ளார்.

ஜேம்ஸ் ஹாரிசன், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில், பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று தனது தூக்கத்திலேயே இயற்கை எய்தினார் என்று அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை (மார்ச் 03) அன்று தெரிவித்தனர். அவருக்கு வயது 88.

ஆஸ்திரேலியாவில் அவர் ‘தங்கக் கை மனிதர்’ என்று அழைக்கப்படுகிறார். ஜேம்ஸ் ஹாரிசனின் ரத்தத்தில் Anti-D எனப்படும் ஒரு அரிய வகை ஆன்டிபாடி இருந்தது. கருவில் இருக்கும் குழந்தையை தாயின் ரத்தம் தாக்கும் அபாயம் இருக்கக் கூடிய கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளைத் தயாரிக்க இந்த ஆன்டிபாடி பயன்படுகின்றது.

14 வயதில், அவருக்கு செய்யப்பட்ட மார்பு அறுவை சிகிச்சையின் போது, பல முறை அவருக்கு ரத்தமாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகே அவர் ரத்த தானம் செய்ய உறுதியளித்ததாக, ஹாரிசனுக்கு அஞ்சலி செலுத்திய ஆஸ்திரேலிய செஞ்சிலுவைச் சங்கத்தின் ரத்த தான சேவை தெரிவித்தது.

By admin