2
ஜேர்மனியின் Magdeburg நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது வயது சிறுவன் மீது காரை செலுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
50 வயதுடைய குறித்த நபர், சனிக்கிழமை மாலை மாக்டேபர்க் மாவட்ட நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.
கருப்பு BMW கார் மோதியதில் நெரிசலான சந்தையில் 200 க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.
சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்வதாகவும், சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் இருந்தால் தமக்கு அனுப்புமாறு பொதுமக்களிடம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுப்பதாகவும் Magdeburg பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் 2006 ஆம் ஆண்டு ஜேர்மனிக்கு வந்து மருத்துவராக பணியாற்றிய 50 வயதான சவூதி பிரஜையான Taleb al-Abdulmohsen என உள்ளூர் ஊடகங்களில் பெயரிடப்பட்டுள்ளார்.