காணொளி: தடை தாண்டும் ஓட்டத்தில் கலக்கும் இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி
பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதின் (Indian Sportswoman of the Year) 6-ஆவது பதிப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 5 வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிரிக்கெட் வீராங்கனைகள் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் ஸ்மிருதி மந்தனா, சதுரங்க வீராங்கனை திவ்யா தேஷ்முக், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை சுருச்சி சிங், தடகள வீராங்கனை ஜோதி யாராஜி ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
100 மீட்டர் தடை ஓட்ட வீரரான ஜோதி யாராஜி, இந்தியாவின் மிகச் சிறந்த தடகள வீராங்கனைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.
பல பதக்கம் வென்றது, 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தேசிய சாதனை படைத்தது இவர் சாதனைகளில் அடங்கும்.
ஜூன் 2025-ல், தைவான் தடகள ஓபனில் தங்கம் வென்றார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 2 தங்கம் வென்றவர்.
பிப்ரவரி 2025-ல் நடந்த தேசிய போட்டிகளில் 100, 200 மீட்டர் தடை ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கம் வென்றார்.
ஹாங்சோவில் நடந்த 2023 ஆசிய போட்டிகளில் வெள்ளி வென்றார்.
2024-ல், ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் போட்டியிட்ட முதல் இந்திய பெண் ஆனார்.
இவர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர்.
குறைவான வசதி இருந்தாலும், பெற்றோர் இவர் கனவை ஆதரித்தனர்.
2024-ல், இந்தியாவின் உயரிய விளையாட்டு விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது பெற்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு