• Fri. Oct 18th, 2024

24×7 Live News

Apdin News

ஜோத்பூர்: காணாமல் போகும் இந்தியாவின் ‘நீல’ நகரம் – காப்பாற்ற முடியுமா?

Byadmin

Oct 18, 2024


ஜோத்பூர், பாரம்பரியம், நீல நிறம், கலாச்சாரம், ராஜஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோத்பூரின் அழகான நீல வீடுகள், பல ஆண்டுகளாக உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்த்துள்ளன

ஒரு இந்திய நகரத்தின் மையமாக உள்ள அழகான நீல வீடுகள், பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்துள்ளன. ஆனால் அந்தப் புகழ்பெற்ற வீடுகள் மெதுவாகத் தங்கள் வசீகரத்தையும், அழகிய நீல நிறத்தையும் இழந்து வருவதை எழுத்தாளர் அர்ஷியா கண்டறிந்தார்.

ஜோத்பூரில் உள்ள பிரம்மபுரி எனும் குடியிருப்புப் பகுதி, ஒரு மலையின் மேல் அமைந்துள்ள புகழ்பெற்ற கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

ராஜபுத்திர மன்னர் ராவ் ஜோதா என்பவரால், 1459ஆம் ஆண்டில் கட்டப்பட்டது இந்த பிரம்மபுரி. அவரது பெயரில் இருந்துதான் ‘ஜோத்பூர்’ என்று இந்த நகரம் அழைக்கப்படுகிறது.

சுவர்களால் சூழப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் இருந்த பிரம்மபுரி, மெஹ்ரான்கர் கோட்டையின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. பின்னர் நீல நிற வீடுகளுடன் கூடிய அந்தப் பகுதி, ஜோத்பூரின் புராதனமான அல்லது அசல் நகரமாக அங்கீகரிக்கப்பட்டது.

By admin