• Fri. Jan 2nd, 2026

24×7 Live News

Apdin News

ஜோஹ்ரான் மம்தானி உமர் காலித்துக்கு கைப்பட எழுதி அனுப்பிய குறிப்பில் கூறியுள்ளது என்ன?

Byadmin

Jan 2, 2026


ஜோஹ்ரான் மம்தானி- உமர் காலித்

பட மூலாதாரம், Getty Images

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் 2020-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் மாணவர் தலைவர் உமர் காலித்துக்கு, நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

உமர் காலித்துக்கு கைப்பட ஒரு குறிப்பை எழுதியுள்ள மம்தானி, “நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்,” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க் நகர மேயராக மம்தானி பதவியேற்ற பிறகு, உமர் காலித்தின் துணைவர் பனோஜோத்ஸ்னா லஹிரி இந்த குறிப்பை வியாழக்கிழமை அன்று சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது.

இருப்பினும், டிசம்பர் மாதம் அவரது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

By admin