• Thu. Mar 19th, 2026

24×7 Live News

Apdin News

ஜோ கென்ட்: இரான் போரை எதிர்த்து ராஜினாமா செய்த அமெரிக்க உயர் அதிகாரியின் குற்றச்சாட்டு என்ன?

Byadmin

Mar 19, 2026


ஜோ கென்ட் ராஜினாமா, இரான் - அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோ கென்ட் நீண்டகாலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளராகவும், அமெரிக்க இராணுவத்தின் கௌரவிக்கப்பட்ட ஒரு படைவீரராகவும் இருந்து வருகிறார்.

இரான் உடனான போரின் காரணமாக, டொனால்ட் டிரம்பின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிபர் தனது “முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில், இரானால் அமெரிக்காவிற்கு “உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார்.

“இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் உள்ள சக்தி வாய்ந்த அதன் ஆதரவு சக்திகளின் அழுத்தம் காரணமாகவே இந்த நிர்வாகம் போரைத் தொடங்கியது” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகை இந்தக் கடிதத்தை நிராகரித்துள்ளது. இரான் முதலில் அமெரிக்காவைத் தாக்கப் போகிறது என்பதற்கான “வலுவான ஆதாரங்கள்” அதிபரிடம் இருப்பதாக அது கூறியுள்ளது.

அமெரிக்காவின் வெறுப்புணர்வைக் கண்காணிக்கும் அமைப்பு ஒன்று, கென்ட் “யூத எதிர்ப்பு உணர்வுகளைத்” தூண்டுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

By admin