• Wed. Mar 19th, 2025

24×7 Live News

Apdin News

ஜோ பைடனின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புச் சேவையை நீக்கிய ட்ரம்ப்!

Byadmin

Mar 18, 2025


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புச் சேவையை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீக்கியுள்ளார்.

55 வயதான ஹண்டர் பைடன் மற்றும் 43 வயதான ஆஷ்லி பைடன் ஆகியோர், 30 க்கும் மேற்பட்ட இரகசிய சேவை முகவர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய சில மணி நேரங்களுக்குள் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ட்ரம்ப் கூறுகையில், “ஹண்டர் பைடனுக்கு நீண்ட காலமாக இரகசிய பாதுகாப்பு சேவை உள்ளது. இதற்கு அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் செலுத்தியுள்ளனர். அவர் இந்த வாரம் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, பாதுகாப்புப் பிரிவில் 18 முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இது அபத்தமானது.

“எனவே, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஹண்டர் பைடன் இனி இரகசிய சேவை பாதுகாப்பைப் பெறமாட்டார். அதேபோல் ஆஷ்லே பைடனுக்குரிய பாதுகாப்பு சேவையும் நீக்கப்படுகிறது” என்றார்.

By admin