• Tue. Feb 4th, 2025

24×7 Live News

Apdin News

டங்ஸ்டன் விவகாரத்தில் தமிழக மக்களின் தூக்கத்தை கெடுத்தது மத்திய அரசு: எம்.பி சு.வெங்கடேசன் பேச்சு | Central govt has disturbed the people of TN over the tungsten issue – MP Su Venkatesan

Byadmin

Feb 4, 2025


புதுடெல்லி: மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாத்தில் பேசிய, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், டங்கஸ்டன் விவகாரத்தில் தமிழக மக்களின் தூக்கத்தை கெடுத்தது மத்திய அரசு என்று குற்றம்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதத்தில் எம்.பி சு.வெங்கடேசன் பேசியதாவது: “மத்திய அரசின் டங்ஸ்டன் சுரங்க சதித் திட்டத்தை முறியடித்த பெருமையோடு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அவையிலே நின்று கொண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் தனித்தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றினார். மதுரை மாவட்டத்தின் மேலூர் ஒன்றியத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

ஆனாலும் மத்திய அமைச்சர் டங்ஸ்டன் சுரங்கத்தை கைவிட மாட்டோம் என மூன்று முறை அறிக்கைவிட்டார். ஆனாலும் நாங்கள் தளரவில்லை. விடாப்பிடியான போராட்டத்தை 77 நாட்கள் நடத்தியதால் இன்றைக்கு வெற்றியோடு நாங்கள் வந்திருக்கிறோம். இந்த வெற்றிக்குப் பிறகு மத்திய அமைச்சர் ‘மக்கள் இனிமேல் நிம்மதியாகத் தூங்குவார்கள் ’ என்று சொல்கிறார். மக்கள் இனிமேல் நிம்மதியாகத் தூங்குவார்கள் சரி , இந்தத் தூக்கத்தைக் கெடுத்தது யார்? தூக்கத்தை கெடுத்தவர்களே நீங்கள்தான் .

மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து விட்டு மத்திய அமைச்சர் சொல்கிறார். மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்தத் துயரத்தைக் கொடுத்தது யார்? நீங்கள் கொடுத்தீர்கள் . அதனால் தான் மக்கள் விடாப்படியான போராட்டத்தை நடத்தி இன்றைக்கு டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வைத்திருக்கிறார்கள். ஆனால் இன்றைக்கு குடியரசுத் தலைவர் உரையிலே என்ன சொல்கிறீர்கள் ?

அரிய வகைக் கனிமங்கள் எல்லாம் தனியார் கைகளுக்கு தாரை வார்க்கப்படும் என்று குறிப்பிடுகிறீர்கள் . ஒரு இரையைப் பறித்துவிட்டு , பெரும் விருந்தே நாங்கள் கொடுக்கிறோம் என்று தனியார் நிறுவனங்களுக்கு நீங்கள் கொடுக்கிறீர்கள். ஒரு அரிட்டாபட்டியை நாங்கள் காப்பாற்றி விட்டோம் அதற்குப் பதிலாக இந்தியாவில் பல அரிட்டாபட்டிகளை உருவாக்குவோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.” என்று அவர் பேசினார்.



By admin