• Thu. Nov 6th, 2025

24×7 Live News

Apdin News

டச்சுக் கிழக்கிந்திய கம்பனியிடம் மதுரை மன்னர்கள் கேட்ட கடிகாரம்

Byadmin

Nov 6, 2025


டச்சுக் கிழக்கிந்திய கம்பனி, மதுரை மன்னர்கள், போர்ச்சுக்கீசியர்கள், வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காலனியாதிக்க காலத்தின் ஆரம்ப நாட்களில் போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய நிறுவனங்களும் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனங்களும்கூட தமிழ்நாட்டின் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.

பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி தமிழகப் பகுதிகளில் வணிகத்தை மேற்கொள்ள ஆரம்பித்தது. அந்தத் தருணத்தில் மதுரையை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களுடன் உறவை மேம்படுத்திக்கொள்ள பல வகைகளில் முயற்சி செய்தது. அதற்காக பல பரிசுகளையும் அளித்தது. அதைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் ஆதிக்கத்தைப் பற்றிப் பேசும்போது பெரும்பாலும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தைப் பற்றியும் சில தருணங்களில் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தையும் பற்றியே விரிவாகப் பேசப்படுகிறது.

ஆனால், காலனியாதிக்க காலத்தின் ஆரம்ப நாட்களில் போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய நிறுவனங்களும் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனங்களும்கூட தமிழ்நாட்டின் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன.

இதில் டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் தென் தமிழகப் பகுதிகளில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தபோது உள்ளூர் ஆட்சியாளர்களான மதுரை நாயக்க மன்னர்களுடன் உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த உறவு மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது.

காயல்பட்டனத்தில் டச்சு வர்த்தக மையம்

டச்சுக் கிழக்கிந்திய கம்பனி, மதுரை மன்னர்கள், போர்ச்சுக்கீசியர்கள், வரலாறு

பட மூலாதாரம், Brill Academic Pub

படக்குறிப்பு, டச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் மதுரை நாயக்க மன்னர்களுக்கும் இடையிலான உறவை மார்கஸ் பி.எம். விங்க் எழுதிய புத்தகம் விரிவாகவே விவரிக்கிறது.

டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி 1602ஆம் ஆண்டிலேயே துவக்கப்பட்டுவிட்டாலும் 1645ஆம் ஆண்டில்தான் காயல்பட்டனத்தில் டச்சுக்காரர்கள் தங்கள் வர்த்தக மையத்தை துவங்கினர்.

By admin