குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.
அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டது.
பிரதிவாதி டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
The post டயானா கமகேவுக்குவுக்குப் பிடியாணை! appeared first on Vanakkam London.