• Mon. Mar 3rd, 2025

24×7 Live News

Apdin News

டாப்5 செய்திகள்: விழுப்புரம் அருகே காதலனுக்கு தேநீரில் எலி மருந்து கலந்து கொடுத்த காதலி – என்ன நடந்தது?

Byadmin

Mar 3, 2025


டாப் 5 நியூஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இன்றைய (03/03/2025) நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்ளில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

திருமணத்துக்கு மறுத்த காதலனுக்கு டீயில் எலி மருந்து கலந்து கொடுத்த பொறியியல் மாணவி ஒருவர், முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள் என்று வாட்ஸ் ஆப்-ல் தகவல் அனுப்பியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், “விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 23 வயது நபர் ஒருவர் இ-சேவை மையம் நடத்தி வந்துள்ளார். அதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிந்திட, அந்த இளைஞரின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, மாணவியை திருமணம் செய்துக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துவிட்டார். இதையடுத்து காதலனை தனது வீட்டுக்கு மாணவி அழைத்தார். அப்போது காதலனுக்கு டீ போட்டுக்கொடுத்துள்ளார். அதை குடித்த சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்தார், அவரது வாயில் நுரை வெளியேறியது. அப்போது தான் அந்த மாணவி, டீ-யில் எலி மருந்து கலந்து கொடுத்ததாக கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அந்த இளைஞர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கூட்டி வரப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதனிடையே முடிந்தால் உன்னை காப்பாற்றிக் கொள் என்று காதலனுக்கு வாட்ஸ் ஆப்-ல் தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார், இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

By admin