• Wed. Oct 23rd, 2024

24×7 Live News

Apdin News

டாலர் – ரூபாய்: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவதால் சாமானியருக்கு என்ன பாதிப்பு?

Byadmin

Oct 23, 2024


அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு டாலருக்கு ரூ.63 ஆக இருந்த மாற்று விகிதம் 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி அன்று, ரூ.84.07 என்னும் மதிப்பில் உள்ளது. இது ரூபாயின் மதிப்பில் இதுவரை கண்டிராத சரிவு.

ரூபாய் மதிப்பின் சரிவு, சாமானியர்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை என்ற போதிலும், நிச்சயமாக அனைத்து இந்தியர்களின் வாழ்விலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணம்..

ரவி, சுரேஷ் இருவரும் சகோதரர்கள். ரவி இந்தியாவில் இருக்கிறார். சுரேஷ் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்று அங்கு குடியேறினார். சுரேஷ் டாலரில் சம்பாதிப்பதால், ரவியை விட அவருக்கு சிறந்த பேங்க் பேலன்ஸ் இருக்கிறது. ரவியும் இந்தியாவில் பணத்தைச் சேமித்து நலமுடன் இருக்கிறார்.

By admin