• Fri. Jan 23rd, 2026

24×7 Live News

Apdin News

டாவோஸ் மாநாட்டில் டிரம்ப் தெரிவித்த கருத்துக்கள் குறித்து பிபிசி வெரிஃபை என்ன கூறுகிறது?

Byadmin

Jan 23, 2026


டொனால்ட் டிரம்ப்

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் , உலகத் தலைவர்கள் மத்தியில் ஆற்றிய தன்னிச்சையான உரையில், அதிபர் டிரம்ப் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை முன்வைத்தார்.

டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை, அவர் ஒரு “சிறிய கோரிக்கை” என்று குறிப்பிட்டார் மற்றும் நேட்டோ அமைப்பில் அமெரிக்காவின் பங்களிப்பு, சீனாவில் காற்றாலை ஆற்றல் ஆகியவை குறித்தும் டிரம்ப் பேசினார்.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அவரது உரையில், பல தவறான கூற்றுகள் இடம் பெற்றிருந்தன. அவற்றை பிபிசி வெரிஃபை ஆய்வு செய்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா ‘கிரீன்லாந்தைத் திருப்பிக் கொடுத்ததா’?

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ளும் தனது விருப்பத்தைப் பற்றி அதிபர் டிரம்ப் பல வாரங்களாகப் பேசி வருகிறார்.

டென்மார்க்கின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஒரு பகுதியான கிரீன்லாந்து, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.

By admin