• Wed. Mar 19th, 2025

24×7 Live News

Apdin News

டாஸ்மாக்: அமலாக்கத்துறை சோதனை ஏன்? செந்தில் பாலாஜி என்ன சொல்கிறார்?

Byadmin

Mar 19, 2025


டாஸ்மாக், மதுபான நிறுவனங்கள், தமிழ்நாடு, செந்தில் பாலாஜி, பாஜக, திமுக

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படுவோரின் இடங்களிலும் டாஸ்மாக் அலுவலகங்களிலும் நடத்தப்பட்ட அமலாக்கத் துறையின் சோதனைகளில் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் இருப்பதைக் கண்டறிந்ததாகச் சொல்கிறது அமலாக்கத் துறை.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக எதிர்க்கிறார் செந்தில் பாலாஜி. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

கடந்த மார்ச் 6ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் அமலாக்கத் துறை பல இடங்களில் சோதனை நடத்தியது. கரூர் மாவட்டத்தில் பொதுப் பணித் துறையின் ஒப்பந்ததாரர் எம்.சி. சங்கர் ஆனந்த், கார்த்தி, சுப்பிரமணி ஆகியோரது இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தியது.

அதேபோல, சென்னை எழும்பூரில் சி.எம்.டி.ஏ. கட்டடத்தில் இருந்த டாஸ்மாக் அலுவலகம், சென்னை தியாகராய நகரில் இருந்த இரு மதுபான நிறுவனங்களின் அலுவலகங்கள், எழும்பூரில் இருந்த ஒரு மதுபான நிறுவனத்தின் அலுவலகம், அம்பத்தூரில் இருந்த ஒரு டாஸ்மாக் கிடங்கு உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன. மொத்தமாக 25 இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

By admin