• Mon. Mar 17th, 2025

24×7 Live News

Apdin News

டாஸ்மாக் முற்றுகை போராட்டம்; தமிழிசை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்!

Byadmin

Mar 17, 2025


இன்று திங்கட்கிழமை (17) டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, தமிழக பா.ஜ.க அறிவித்திருந்த நிலையில், சென்னையில் உள்ள அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் பொலிஸார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை வீட்டின் முன்பு பொலிஸார் முகாமிட்டுள்ளனர். அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, பா.ஜ.க மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் போராட்டத்துக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பா.ஜ.க உறுப்பினர்கள் சென்னை நோக்கி வந்த நிலையில், அவர்களை பொலிஸார் தடுத்து வைத்ததாக, எக்ஸ் தளத்தில் வினோஜ் பி.செல்வம் பதிவு வெளியிட்டிருந்தார்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் வீடுகளின் முன்பும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு பொலிஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கையாக பொலிஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, டாஸ்​மாக் மூலம் 1,000 கோடி ரூபாய் முறை​கேடு நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.

இந்த முறைகேட்டை கண்​டித்தே இன்று ஆர்ப்​பாட்​டம் நடத்தப்படும் என தமிழக பா.ஜ.க அறிவித்திருந்தது.

By admin