• Wed. Oct 29th, 2025

24×7 Live News

Apdin News

டிஎஸ்பியை கத்தியால் குத்திய வழக்கில் தென்காசி ஹனீபாவுக்கு 5 ஆண்டுகள் சிறை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய தீர்ப்பு | Tenkasi Hanifa sentenced to 5 years in prison for stabbing DSP

Byadmin

Oct 29, 2025


மதுரை: ​பாஜக மூத்த தலை​வர் அத்​வானியை கொல்ல முயன்ற வழக்​கில் தலைமறை​வாக இருந்​த​போது, தன்​னைப் பிடிக்க வந்த டிஎஸ்​பியை கத்​தி​யால் குத்​திய வழக்​கில் தென்​காசி ஹனீ​பாவுக்கு 5 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை விதிக்கப்பட்டது. பாஜக மூத்த தலை​வர் எல்​.கே.அத்​வானி 2011ல் தமிழகத்​தில் ரத யாத்​திரை மேற்​கொண்​டார்.

மதுரையி​லிருந்து தென்​காசிக்கு திரு​மங்​கலம் ஆலம்​பட்டி வழி​யாக அத்​வானி வாக​னத்​தில் செல்​லத் திட்​ட​மிட்​டிருந்த நிலை​யில், ஆலம்​பட்டி பாலத்​தின் அடி​யில் பைப் வெடிகுண்டு கண்​டறியப்​பட்​டது. விசா​ரணை​யில் பைப் வெடி குண்​டை வெடிக்​கச் செய்து அத்​வானியை கொல்ல முயற்சி நடந்​தது தெரிய​வந்​தது.

இது தொடர்​பாக தென்​காசி ஹனீபா என்ற முகமது ஹனீபா உள்​ளிட்​டோர் மீது திரு​மங்​கலம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். வத்​தலக்​குண்டு அருகே பதுங்கி இருந்த ஹனீ​பாவை எஸ்​ஐடி டிஎஸ்பி கார்த்​தி​கேயன் தலை​மையி​லான தனிப்​படை சுற்றி வளைத்​தது. அப்​போது டிஎஸ்​பியை கத்​தி​யால் குத்​தி​விட்​டு, ஹனீபா தப்​பிக்க முயன்​றார். பின்​னர் அவர் கைது செய்​யப்​பட்​டார். இது தொடர்​பாக ஹனீபா மீது கொலை முயற்சி வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. ஆனால், ஹனீபா கீழமை நீதி​மன்​றத்​தால் விடுவிக்​கப்​பட்​டார்.

இது தொடர்​பான மேல்​முறை​யீட்டு வழக்​கில், கீழமை நீதி​மன்​றத்​தின் உத்​தரவை ரத்து செய்த உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வு, ஹனீ​பாவை குற்​ற​வாளி என அறி​வித்​தது. இந்த வழக்கு நீதிப​தி​கள் பி.வேல்​முரு​கன், எல்​.விக்​டோரியா கெளரி அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. தென்​காசி ஹனீபா ஆஜரா​னார். அவருக்கு 5 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதித்து நீதிபதி​கள் உத்தரவிட்டனர்.



By admin