குப்பை மேட்டை 40,000 மரங்களுடன் மிகப்பெரிய பூங்காவாக மாற்றிய ‘தனி ஒருவன்’
பிரேசிலில் சா பாலோ நகரில் உள்ள டிகுவாதிராவில் தனி நபர் ஒருவர் 40 ஆயிரம் மரங்களை நட்டு வைத்து ஒரு பூங்காவையே உருவாக்கியுள்ளார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒரு நாள் டிகுவாதிராவில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, அந்த பகுதி மோசமடைந்து வருவதை நேரில் கண்டார். மாற்றங்களை ஏற்படுத்தும் பொருட்டு, டிகுவாதிரா ஓடையோரமாக அவர் மரங்களை நட ஆரம்பித்தார்.
தற்போது 40 ஆயிரம் மரங்களுடன் அப்பகுதியில் பிரம்மாண்டமான பூங்கா இவரால் உருவாகியுள்ளது. இந்த நிகழ்வு சாத்தியமானது எப்படி? முழு விபரம் இந்த வீடியோவில்!
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.