0
ஒவ்வொரு முன்னணி டிஜிட்டல் தளங்களும் தங்களுடைய மில்லியன் கணக்கிலான சந்தாதாரர்களை வசப்படுத்துவதற்காக வாரந்தோறும் புதிய இணைய தொடர்களை தயாரித்து ஒளிபரப்புகிறது. அந்த வகையில் நெட்ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் சைக்காலஜிக்கல் திரில்லராக தயாராகி இருக்கும் ‘ஸ்டீபன்’ எனும் இணைய தொடர் ஒளிபரப்பாகிறது.
அறிமுக இயக்குநர் மிதுன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த ‘ஸ்டீபன்’ எனும் இணைய தொடரில் கோமதி சங்கர் , மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த இணையத் தொடரை ஜே. எம். புரொடக்சன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயக்குமார்- மோகன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், ” ஆர்ப்பாட்டம் எதுவும் இன்றி துல்லியமாக அவதானித்து கொலைகளை செய்யும் தொடர் கொலையாளி பற்றிய கதை தான் ‘ஸ்டீபன்’. இந்த கதாபாத்திரத்தின் உளவியலை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் விவரிப்பது தான் இந்த இணையத் தொடரின் திரைக்கதை. இது இந்த இணைய தொடர் பார்வையாளர்களுடன் எளிதாக உணர்வு பூர்வமான இணைப்பினை ஏற்படுத்தும் என நம்புகிறோம்” என்றார்.
இந்த இணையத் தொடர் நெட்ஃபிளிக்ஸ் எனும் முன்னணி டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி முதல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.