• Sun. Nov 23rd, 2025

24×7 Live News

Apdin News

‘டிச. 31க்குள் பான் – ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்’ – 2 எளிய வழிகள்

Byadmin

Nov 23, 2025


பான் –ஆதார் இணைப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிவிப்பில் , டிசம்பர் 31, 2025க்குள், பான் கார்டு வைத்திருக்கும் அனைத்து மக்களும் தங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில், வருமான வரி தாக்கல் செய்ய, வங்கிக் கணக்கு தொடங்க அல்லது வேறு ஏதேனும் நிதிச் செயல்பாடு செய்ய, நிரந்தரக் கணக்கு எண் (PAN) அத்தியாவசியமாகிவிட்டது.

ஆனால் உங்கள் ஆதார் எண்ணை பான் உடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஜனவரி 1, 2026 முதல் உங்கள் பான் கணக்கு முடக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) அறிவிப்பில் , டிசம்பர் 31, 2025க்குள், பான் கார்டு வைத்திருக்கும் அனைத்து மக்களும் தங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதைச் செய்யாவிட்டால், ஒருவரது பான் கணக்கு முடக்கப்படும்.

அதன் பிறகு, அனைத்து நிதி நடவடிக்கைகளிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.

By admin