0
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான பார்வதி நாயர் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘உன் பார்வையில்’ எனும் திரைப்படம் – படமாளிகையில் வெளியாகாமல், நேரடியாக சன் நெக்ஸ்ட் எனும் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று வெளியாகிறது.
இயக்குநர்- ஒளிப்பதிவாளர்- கபீர் லால் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘உன் பார்வையில்’ எனும் திரைப்படத்தில் பார்வதி நாயர்,கணேஷ் வெங்கட்ராம் , நிழல்கள் ரவி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” கணவர் மற்றும் இரட்டை சகோதரி மர்மமான முறையில் இறக்கிறார்கள். இவர்களுடைய மரணத்தின் பின்னணி குறித்து பார்வை திறன் சவால் உள்ள கதையின் நாயகி தேடத்தொடங்குகிறார். அவர் எதிர்கொள்ளும் சவால்களும், சம்பவங்களும் தான் இப்படத்தின் கதை” என்றார்.
வங்காள மொழியில் வெளியான திரைப்படத்தின் தமிழ் மறு உருவாக்கம் இந்த திரைப்படம் என தகவல் வெளியாகி இருப்பதும், ஸ்பானிஷ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமற்ற தழுவலாக இப்படம் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடச் பட்டிருக்கும் நிலையில் இந்தத் திரைப்படம் நேரடியாக டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று வெளியாகிறது.