இலங்கையை தாக்கிய டித்வா சூறாவளி காரணமாக கண்டி மாவட்டத்தில், இதுவரை 240 பேர் உயிரிழந்து மேலும் 75 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்திவ நிலையத்தின் கண்டி மாவட்ட துனை அத்தியட்சர் இந்திக ரணவீர தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் இன்றைய 14 நிலவரப்படி 54,988 குடும்பங்களைச் சேர்ந்த 1,89,265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திக ரணவீர மேலும் தெரிவித்தார்.
மேலம் 20,155 குடும்பங்களைச் சேர்ந்த 70,282 பேர் இடம் பெயர்ந்துள்ளதாகவும், 6,097 குடும்பங்களைச் சேர்ந்த 21,456 பேர் 261 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்திக ரணவீர மேலும் தெரிவித்தார். 12,974 குடும்பங்களைச் சேர்ந்த 45,732 பேர் உறவினர் வீடுகளில் வசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
கண்டி மாவட்டத்தில், 2263 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன, மேலும் 14,735 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அவர் மேலும் கூறினார்.
கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த வின் அறிவுறுத்தலின் பேரில், அனர்த்த முகாமைத்திவ நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம் மக்களின அனறாட நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரணவீர மேலும் தெரிவித்தார்.
The post டித்வா சூறாவளியால் கண்டி மாவட்டத்தில் 240 பேர் உயிரிழப்பு | 75 பேர் மாயம் appeared first on Vanakkam London.