• Sat. Jan 24th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்பின் கிரீன்லாந்து திட்டம் சீனா மற்றும் ரஷ்யாவுக்கு லாபமாக மாறுமா?

Byadmin

Jan 24, 2026


டொனால்ட் டிரம்ப், ரஷ்யா, சீனா, அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images/BBC

டென்மார்க்கின் சுயாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை ரஷ்யாவும் சீனாவும் கைப்பற்றுவதைத் தடுக்க, அமெரிக்கா அந்த தீவை கையகப்படுத்த வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.

இந்த மாதம் டொனால்ட் டிரம்ப், “நாம் கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டும். நாம் அதைச் செய்யவில்லை என்றால், சீனா அல்லது ரஷ்யா அதை கைப்பற்றிவிடும். கிரீன்லாந்தில், அண்டை வீட்டார்கள் போல அவர்கள் இருப்பதை நான் விரும்பவில்லை, அது ஒருபோதும் நடக்காது,” என்று கூறியிருந்தார்.

விளாடிமிர் புதினும் ஷி ஜின்பிங்கும் டிரம்பின் கிரீன்லாந்து தொடர்பான லட்சியங்களை (மற்றும் அவற்றை அடைய அவர் விடுக்கும் பலப்பிரயோக அச்சுறுத்தல்கள் மற்றும் வர்த்தக வரி எச்சரிக்கைகளை) வரவேற்கலாம் என்று பலரும் நம்புகின்றனர்.

ஐரோப்பிய கொள்கை மைய ஆய்வாளர் மரியா மார்ட்டிசியூட், “ரஷ்யாவும் சீனாவும் தங்கள் அதிர்ஷ்டத்தை நம்ப முடியாத சூழலில் இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்”, என்று கூறுகிறார்.

“ஐரோப்பிய நாடுகளும் நேட்டோ (NATO) கூட்டணியும் தங்களின் மிக சக்திவாய்ந்த கூட்டாளியாலேயே (அமெரிக்கா) அச்சுறுத்தப்படுவது சீனா மற்றும் ரஷ்யாவின் நலன்களுக்குச் சாதகமாக உள்ளது. ஏனெனில் இது யுக்ரேனில் ரஷ்யாவின் செயல்பாடுகளுக்கும் தைவான் தொடர்பான சீனாவின் லட்சியங்களுக்கும் சட்டபூர்வத்தன்மையை வழங்கலாம்”, என்றும் மரியா கூறுகிறார்.

By admin