• Sat. Jun 7th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்பின் புதிய வரிக் கொள்கை இந்தியாவுக்கு பணம் அனுப்புவதை சிக்கலாக்குமா?

Byadmin

Jun 7, 2025


டிரம்ப்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் தனது “பெரிய மசோதாவை” ஆதரிக்கத் தனது கட்சியை வலியுறுத்துகிறார்.

டொனால்ட் டிரம்பின் “ஒன், பிக், பியூட்டிஃபுல் பில் ஆக்ட்” என்ற மசோதாவில், அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த வெளிநாட்டு மக்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பும் பணத்தில் இருந்து பில்லியன் கணக்கான தொகையை வரியாக எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு பிரிவு மறைந்துள்ளது.

அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், ஹெச்-1 பி விசா போன்ற தற்காலிக விசா வைத்திருக்கும் பணியாளர்களுக்கும், அமெரிக்காவில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்தில் 3.5% வரி விதிக்க இந்தத் திட்டம் முன்மொழிகிறது.

அவ்வாறு உலக அளவில் இந்தியாவிற்கு தான் அதிகமான பணம் அனுப்பப்படுகிறது. எனவே, இந்தியாவுக்கு இது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மெக்சிகோ, சீனா, பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளும் அதிகளவில் பணம் பெறும் நாடுகளாக உள்ளன. 2023ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் 119 பில்லியன் டாலர் அளவிலான பணத்தை இந்தியாவுக்கு அனுப்பினர்.

By admin