• Wed. Mar 25th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்பின் ‘பேச்சுவார்த்தை’ குறித்து இரான் மற்றும் இஸ்ரேல் ஊடகங்கள் கூறுவது என்ன?

Byadmin

Mar 25, 2026


"கண்ணியம், மனிதநேயம் அல்லது மனசாட்சியின் சுவடே இல்லாத, உண்மைக்கு மாறான ஒருவரிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்" என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் அலி நிக்ஸாத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Majid Saeedi/Getty Images

படக்குறிப்பு, தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் (மார்ச் 13)

அமெரிக்காவுடன் போர் நிறுத்த குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை இரானிய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

மேலும் இரானிய ஊடகங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டையே எடுத்துள்ளன.

இரானுடன் நடந்த “பயனுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு” பிறகு, இரானிய மின் நிலையங்கள் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மார்ச் 23 அன்று தெரிவித்தார்.

இரான் ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் இரானின் மின் உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்படும் என்று கூறி மார்ச் 21 அன்று டிரம்ப் 48 மணிநேர காலக்கெடுவை விதித்திருந்தார்.

மார்ச் 23 அன்று இரவு, “குழந்தைகளைக் கொல்லும் தாக்குதல் நடத்துபவர்களை” எதிர் கொள்வதற்கு இதுவே சரியான வழி என்று கூறி, தனது சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை நியாயப்படுத்தியது.

By admin