• Wed. Aug 6th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்பின் மிரட்டல்: இந்தியா எவ்வளவு கடுமையாக பதிலளிக்க முடியும்? – நிபுணர்கள் அலசல்

Byadmin

Aug 5, 2025


டிரம்பின் அச்சுறுத்தலை 'நியாயமற்றது' என்று கூறும் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது ” கணிசமாக” அதிக வரி விதிக்கப்படும் என்ற டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கையை, இந்தியா “நியாயமற்றது மற்றும் காரணமற்றது” எனக் கூறியுள்ளது.

“யுக்ரேனில் ரஷ்யா நடத்தும் போரில் எத்தனை பேர் கொல்லப்படுகிறார்கள் என்பது குறித்து இந்தியாவுக்கு கவலையில்லை” என்று ட்ரூத் சோசியல் தளத்தில் வெளியிட்ட பதிவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்தியா மீதான வரிகளை கணிசமாக உயர்த்தப் போவதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது .

2022-ஆம் ஆண்டில் ரஷ்யா யுக்ரேன் மீது முழு அளவிலான போரை தொடங்கியபோது, பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தை குறைத்தன. அதனைத் தொடர்ந்து, இந்தியா ரஷ்யாவில் இருந்து ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக மாறியது.

By admin