• Sat. Apr 5th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்பின் வரி விதிப்பு இந்தியாவில் எந்தெந்த துறைகளை பாதிக்கும்? ஆனந்த் ஸ்ரீனிவாசன் நேர்காணல்

Byadmin

Apr 4, 2025


டொனால்ட் டிரம்ப், புதிய வரிவிதிப்பு

பட மூலாதாரம், Reuters

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு நாடுகளுக்கான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இந்த வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதிபர் டிரம்ப் விரும்பியது நடக்குமா, இந்தியாவில் எந்தெந்தத் தொழில் துறைகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தும், தங்கத்தின் விலை அதிகரிக்குமா என்பவை குறித்து பொருளாதார நிபுணரான ஆனந்த் ஸ்ரீநிவாசன் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமையன்று இறக்குமதிக்கான புதிய பரஸ்பர வரி விதிப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.

அமெரிக்காவுக்குள் வரும் பொருட்களுக்கு இறக்குமதி வரி குறைவாக இருக்கும் வேளையில், பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவில் இறக்குமதி வரி விதிப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். அதன் காரணமாக, ஒவ்வொரு நாட்டுக்குமான இறக்குமதி வரிகளை அறிவித்துள்ளார். அதன்படி இந்தியாவுக்கு 27 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.

By admin