• Fri. Sep 12th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்புக்கு நெருக்கமானவர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சுட்டுக்கொலை!

Byadmin

Sep 12, 2025


அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்புக்கு மிகவும் நெருக்கமான சார்லி கிர்க் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின், ஓரெம் நகரில் உள்ள யூட்டா வேலி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் மேடையில் உரையாடிக்கொண்டிருக்கும்போதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஒற்றைத் தோட்டா, அவரது கழுத்தில் பாய்ந்தது. கிர்க் சுடப்பட்டதும் அங்கு கூடியிருந்த மாணவர்கள் சிதறி ஓடியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

சந்தேகநபர் இதுவரை பிடிபடவில்லை. விசாரணை தொடர்வதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

உலகெங்கும் இந்தப் படுகொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூட்டா மாநிலத்தின் ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ், இது ஓர் அரசியல் படுகொலை என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, “பல மில்லியன் பேருக்கு சார்லி முன்னுதாரணமாக இருந்தார். நாட்டுப்பற்று மிக்கவர். அவரது மரணம் அதிர்ச்சி தருகிறது. இது அமெரிக்காவின் கறுப்புத் தருணம்” என்று, அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் கூறினார்.

“உண்மைக்கும் சுதந்திரத்திற்கும் முன்மாதிரியாக இருந்தார். இளையர்கள் மத்தியில் அவர் அளவுக்கு மதிக்கப்பட்டவர் யாரும் இல்லை” என்றும் கூறிய டிரம்ப், கிர்க் சார்லியின் மனைவி, பிள்ளைகளுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.

The post டிரம்புக்கு நெருக்கமானவர் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் சுட்டுக்கொலை! appeared first on Vanakkam London.

By admin