0
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பின் காஸா அமைதித் திட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் வாக்களித்துள்ளது.
அந்தத் திட்டத்தை ஆதரவித்து 13 நாடுகள் வாக்களித்தன. அதேவேளை, ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்கவில்லை.
அந்தத் திட்டத்தின்கீழ், காஸாவில் அனைத்துலக அமைப்பு ஒன்று பணியமர்த்தப்படும். அது எதிர்காலத்தில் பாலஸ்தீனத் தனி நாட்டை உருவாக்க வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.
அமைப்புக்குத் தாம் தலைமை தாங்கப்போவதாக சமூக ஊடகத்தில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், திட்டத்தின்கீழ் காஸாவை நிர்வகிக்கும் பொறுப்புகளில் ஹமாஸ் அமைப்புக்கு இடமில்லை. திட்டம் பாலஸ்தீனர்களின் அரசியல், மனிதாபிமான கோரிக்கைகளையும் உரிமைகளையும் பூர்த்தி செய்யவில்லை என்று ஹமாஸ் குறைகூறியது.
புதிய அனைத்துலக அமைப்பு, இஸ்ரேலுடனும் எகிப்துடனும் இணைந்து செயல்படும். பாலஸ்தீனக் காவல்துறை உருவாக்கப்படும்.
எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்கவும் காஸாவில் உள்ள ஆயுதம் ஏந்திய குழுக்களிடமிருந்து ஆயுதங்களை நிரந்தரமாக நீக்கவும் அமைப்பு பணியாற்றும்.