• Tue. Aug 5th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்ப்பின் வரி விதிப்பதால் நிலைதடுமாறும் சுவிட்ஸர்லாந்து!

Byadmin

Aug 3, 2025


சுவிட்ஸர்லாந்து மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 39 சதவீத அதிகரித்த வரி அறிவித்துள்ள பின்னணியில், பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் சிரியா, லாவோஸ் மற்றும் மியான்மருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் சுவிட்ஸர்லாந்துக்கு அதிக வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

டிரம்பின் நிர்வாகம், சுவிஸ் பொருட்களுக்கு 39 சதவீத வரி விகிதத்தை விதிக்கும் திட்டங்களை வெள்ளிக்கிழமை அறிவித்தது. வர்த்தக தடைகளை நீக்குவதன் மூலம் அர்த்தமுள்ள சலுகைகளை வழங்க சுவிட்சர்லாந்து மறுத்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக வெள்ளை மாளிகை கூறியது.

“பணக்கார, அதிக வருமானம் கொண்ட நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து, அமெரிக்கா ஒருதலைப்பட்ச வர்த்தக உறவை பொறுத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது” என்றும் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதன்மூலம் ஐரோப்பிய நாடான சுவிட்ஸர்லாந்து அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வரிகளில் இருந்து வெளியேற பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், “இன்னும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என நம்புவதாகவும்” சுவிஸ் அரசாங்கம் அறிக்கையில் ஒன்றில் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் அமெரிக்க அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இவ்வாறு அதிகரித்த வரி விதிப்பானது தமது அரசாங்கத்தை பெரும் ஏமாற்றமடைய செய்துள்ளதாக சுவிஸ் ஜனாதிபதி தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்துக்கு விதிக்கப்பட்டுள்ள வரியானது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விதிக்கப்பட்டுள்ள 15 சதவீத வரியுடன் ஒப்பிடும் போது, இரு மடங்கு அதிகமாகும்.

வரி அதிகரிப்பால் புதிய கட்டணங்கள், மருந்து உற்பத்தி, சொக்லேட் மற்றும் கடிகார தயாரிப்பு உள்ளிட்ட பல முக்கிய சுவிஸ் தொழில்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறது.

By admin