• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

டிரம்ப் – சீனா: பொருளாதாரத்தை சரிசெய்ய சீனா எடுக்கும் முயற்சிகளை டிரம்பின் நடவடிக்கைகள் பாதிப்பை ஏற்படுத்துமா?

Byadmin

Nov 12, 2024


டொனால்ட் டிரம்ப் மற்றும் ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கடந்த 2019-ல் கடைசியாக நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட டிரம்ப் மற்றும் ஜின்பிங்

வலுவிழந்துவரும் தங்கள் நாட்டு பொருளாதாரத்தை முடுக்கிவிட சீனா புதிய நடவடிக்கைகளை அறிவித்துவரும் அதேவேளையில், டொனால்ட் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்கும் தயாராகிவருகிறது.

உள்ளூர் அரசாங்கக் கடன் வளர்ச்சியைத் தடுக்காமல் இருக்க, அந்நாடு பல்லாயிரக்கணக்கான பில்லியன் டாலர் கடனைத் தீர்க்க விரும்புகிறது.

சீன தயாரிப்பு பொருட்களுக்கு 60% வரையிலான வரி உட்பட இறக்குமதி பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்த டிரம்ப் இந்த தேர்தலில் வென்றார்.

தொழில்நுட்பத்தின் அதிகார மையமாக நாட்டை மாற்றுவதற்கான ஷி ஜின்பிங்கின் திட்டங்களை டிரம்பின் வெற்றி தடுக்கலாம். உலகின் இரு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையே உறவில் மேலும் நெருக்கடி ஏற்படலாம்.

By admin