• Sat. Aug 16th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்ப் – புதின் அலாஸ்கா சந்திப்பு: இருவரும் சாதிக்க நினைக்கும் அரசியல் கணக்கு என்ன?

Byadmin

Aug 16, 2025


டிரம்ப்-புதின் சந்திப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் சந்தித்து பேசுகின்றனர்.

யுக்ரேனில் நடைபெற்று வரும் ரஷ்ய போரை நிறுத்துவது குறித்து பேச அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் சந்திக்க உள்ளனர்

யுக்ரேனிய பகுதியை வென்றெடுக்கும் விருப்பத்தில் புதின் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார். ஆனால் டிரம்ப் உலக அமைதி காப்பாளராக இருக்கும் தனது விருப்பத்தை எந்த ரகசியமும் இல்லாமல் வெளிப்படுத்துகிறார்.

ஆனால் இருவரும் வேறு சில வாய்ப்புகள் இருப்பதையும் கவனிப்பார்கள். புதின் உலக அரங்கில் ராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க முயற்சி செய்யலாம். புதினை குறித்து வெவ்வேறு கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில், டிரம்ப் என்ன செய்வார் என்று யூகிப்பது சற்று கடினமானதாகும்.

இந்த சந்திப்பிலிருந்து இரு நாட்டு தலைவர்கள் என்ன எதிர்ப்பார்க்கக்கூடும் என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

By admin