• Tue. Feb 25th, 2025

24×7 Live News

Apdin News

டிரம்ப் – புதின்: ஒரு தொலைபேசி உரையாடல் மூலம் ஒரே வாரத்தில் உலகையே உலுக்கியது எப்படி?

Byadmin

Feb 21, 2025


அமெரிக்கா, ரஷ்யா, யுக்ரேன், சௌதி அரேபியா, அமைதிப் பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ரியாதில் பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற முதல் மாநாட்டில் சந்தித்துகொண்டனர்

  • எழுதியவர், ஸ்டீவ் ரோஸன்பர்க்
  • பதவி, ரஷ்ய ஆசிரியர்

1917 ரஷ்ய புரட்சியை நேரில் பார்த்த சாட்சியாக, அதைப் பற்றி எழுதிய அமெரிக்க பத்திரிகையாளர் ஜான் ரீட், தான் எழுதிய கட்டுரைக்கு உலகை உலுக்கிய 10 நாட்கள் என்று தலைப்பிட்டார்.

ஆனால் டொனால்ட் டிரம்புக்கும், விளாதிமிர் புதினுக்கும் 10 நாட்கள் என்பது மிக நீண்ட காலம். அவர்கள் ஒரு வாரத்திலேயே அனைத்து விஷயங்களையும் அசைத்துப் பார்த்திருக்கிறார்கள்.

அது பிப்ரவரி 12ஆம் தேதி புதின்-டிரம்ப் தொலைபேசி உரையாடல் மற்றும் இருதரப்பு உறவுகளை தொடரவிருப்பதாக அவர்கள் அறிவித்த வாக்குறுதிகளுடன் தொடங்கியது.

ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டிலும், ஐரோப்பா – அமெரிக்கா இடையேயான பிளவிலும் இது தொடர்ந்தது.

By admin