• Thu. Jun 18th, 2026

24×7 Live News

Apdin News

டிரம்ப் முன்னிலையில் மோதி பேசியதை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது ஏன்?

Byadmin

Jun 18, 2026


அமெரிக்கா, இந்தியா, பிரதமர் மோதி, மார்கோ ரூபியோ, ஜெய்சங்கர், ஜி7 மாநாடு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் பேசினார்.
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிரான்சில் செவ்வாய்கிழமை அன்று நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பாதுகாப்பான கடல் வழித்தடங்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு பற்றி பிரதமர் நரேந்திர மோதி பேசினார்.

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் இந்தியாவின் கூட்டாளிகளுக்கு உயிர் மற்றும் பொருட் சேதங்களை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹோர்மூஸ் நீரிணையில் கடல்சார் வர்த்தகத்தில் ஏற்பட்ட இடையூறு ஒட்டுமொத்த உலகளாவிய பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. இந்த மோதலில் இந்தியக் குடிமக்கள் பலரும் உயிரிழந்துள்ளனர்.

“உலகளாவிய கடல்சார் வர்த்தகம் மூலம் அனைத்து நாடுகளையும் இணைக்கும் மாலுமிகளின் பாதுகாப்பு என்பது ஒரு கூட்டுப் பொறுப்பு. எனவே, மாலுமிகள் அச்சமின்றி வேலை செய்ய, கடல் வழித்தடங்களில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்,” என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.

ஜூன் 9-ஆம் தேதி ஓமன் கரை அருகே “செடெபெலோ” என்கிற வணிக கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இந்தியர்கள் கொல்லப்பட்டனர். எனவே கடல்சார் பாதுகாப்பு விவகாரத்தை பிரதமர் மோதி எழுப்புவது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

By admin