• Thu. Jan 23rd, 2025

24×7 Live News

Apdin News

டிரம்ப்: ரஷ்யாவுக்கு அன்பு கலந்த எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்- யுக்ரேன் எதிர்பார்ப்பு என்ன?

Byadmin

Jan 23, 2025


போரை நிறுத்த வேண்டும்  - புதினை எச்சரிக்கும் டிரம்ப்

பட மூலாதாரம், EPA

யுக்ரேனில் போரை நிறுத்தவில்லை என்றால் ரஷ்யா மீது பல்வேறு வரிகள் விதிக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோசியலில் கருத்து பதிவிட்டிருந்த டிரம்ப், போரை நிறுத்துவதற்கான அழுத்தம் கொடுப்பதால் ரஷ்யாவுக்கும் அதன் அதிபருக்கும் தான் “ஒரு பெரிய உதவி” செய்வதாக தெரிவித்திருந்தார்.

2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா தொடங்கிய முழு வீச்சிலான போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையை ஒரே நாளில் எடுப்பேன் என டிரம்ப் ஏற்கனவே கூறியிருந்தார்.

அதற்கு ரஷ்யா எந்த பதிலையும் அளிக்கவில்லை. எனினும் புதிய அமெரிக்க நிர்வாகத்துடன் ஒத்துழைக்க ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதாக ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் சமீப நாட்களில் தெரிவித்துள்ளனர்.



By admin