• Tue. Jan 27th, 2026

24×7 Live News

Apdin News

டி20 உலகக்கோப்பையை புறக்கணித்தால் பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் சிக்குமா?

Byadmin

Jan 27, 2026


பாகிஸ்தான், ஐசிசி, டி20 உலக கோப்பை

பட மூலாதாரம், AFP via Getty Images

அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பது தொடர்பான அனைத்து வாய்ப்புகளும் கைவசம் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃபைச் சந்தித்த பிறகு பேசிய அவர், இந்த விவகாரத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

“பிரதமருடனான சந்திப்பு நல்லபடியாக இருந்தது. ஐசிசி விவகாரம் பற்றி அவரிடம் விளக்கினேன். அனைத்து வாய்ப்புகளையும் கைவசம் வைத்துக் கொண்டு இதனை தீர்க்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்,” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வங்கதேசம் நீக்கப்பட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விமர்சித்திருந்தது. பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஆடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கின்றன.

இந்தத் தொடரில் வங்கதேசம் சேர்க்கப்படுவதற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்திருந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தத் தொடரில் கலந்து கொள்ளுமா என்பது உறுதியற்ற நிலையில் இருக்கிறது. பாகிஸ்தான் அரசு அதுகுறித்து முடிவு எடுக்கும் என மொஹ்சின் நக்வி கூறியுள்ளார்.

By admin