• Mon. Feb 2nd, 2026

24×7 Live News

Apdin News

டி20 உலகக்கோப்பை: இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பு பற்றி அந்நாட்டு முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

Byadmin

Feb 2, 2026


  கிரிக்கெட் , இந்தியா, பாகிஸ்தான், ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் என்றும், ஆனால் இந்தியாவுக்கு எதிராக எந்தப் போட்டியிலும் விளையாடாது என்றும் கூறியுள்ளது.

இந்த மாதம் பிப்ரவரி 7 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில், பாகிஸ்தானின் இந்த முடிவு நாட்டிற்குள்ளும் சர்வதேச கிரிக்கெட் உலகிலும் கலவையான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சல்மான் ஆகா, இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்ற முடிவு அவருடையது அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்குப் பிறகு, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போவதில்லை என்ற முடிவு எங்களுடையது அல்ல. அரசாங்கமோ அல்லது பிசிபி தலைவரோ என்ன செய்யச் சொன்னாலும் நாங்கள் செய்வோம்” என்று கூறினார்.

இந்தியாவில் போட்டிகளை விளையாட மறுத்து வங்கதேசம் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியபோது​​ பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது.

By admin