• Sat. Feb 7th, 2026

24×7 Live News

Apdin News

டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்குள்ள ஒரே பிரச்னையும், சவால் தரும் 3 அணிகளும் – ஒரு விரிவான அலசல்

Byadmin

Feb 7, 2026


டி20 உலகக் கோப்பை 2026, இந்தியா, கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சூர்யகுமார் யாதவ்

    • எழுதியவர், வித்யுத் சிவராமகிருஷ்ணன்
    • பதவி, முன்னாள் கிரிக்கெட் வீரர், தமிழ்நாடு

2026 டி20 உலகக் கோப்பை இன்று (பிப்ரவரி 7) தொடங்குகிறது. இந்தியாவும், இலங்கையும் இந்த மிகப் பெரிய தொடரை நடத்த தயாராகிவிட்டன. 20 அணிகள் மோதும் இந்தத் தொடர் நிச்சயம் ஒவ்வொரு உலகக் கோப்பையைப் போலவும் பல ஆச்சரியங்களைக் கொடுக்கலாம். ஆனால், கோப்பை வெல்லக்கூடிய அணிகள் என்று யோசிக்கும்போது அங்கு பெரிதாக ஆச்சரியங்கள் இருக்காது என்றே நான் நினைக்கிறேன்.

இந்த உலகக் கோப்பையை ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா வெல்வதற்கான சாத்தியம் அதிகமாக இருக்கிறதாகவே நான் கருதுகிறேன். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் அணியாக அடுத்தடுத்து இரண்டு கோப்பைகள் வெல்ல இதுவொரு நல்ல வாய்ப்பு.

சொல்லப்போனால், 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை விட இப்போதைய அணி பலமாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த டி20 அணியைப் பார்த்தால் எனக்கு 1990கள், 2000-த்தின் முற்பகுதியில் இருந்த ஆஸ்திரேலிய அணியைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.

அந்த ஆஸ்திரேலிய அணி எப்படி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியதோ, அப்படி இந்த இந்திய அணி டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துகிறது. 1999, 2003, 2007 என தொடர்ந்து 3 உலகக் கோப்பைகளை அந்த அணி வென்றது. அதுபோல், ஆதிக்கம் செலுத்தி இந்த அணி உலகக் கோப்பையை வெல்லும் என்று நான் நினைக்கிறேன்.

போட்டியை வென்று கொடுக்கக்கூடிய திறன், ஆல்ரவுண்ட் திறமை, ஆல்ரவுண்டர்களின் எண்ணிக்கை, பவர்பிளே அதிரடி, ‘பவர் ஹிட்டிங்’, வேரியேஷன் நிறைந்த பௌலிங் யூனிட், எதற்கும் பயப்படாத அவர்களின் அஞ்சாமை, அனைவருக்குள்ளும் இருக்கும் நம்பிக்கை போன்றவற்றையெல்லாம் பார்க்கும்போது நிச்சயம் இந்தியா ஆதிக்கம் செலுத்தி, வெல்லும் என்றே தோன்றுகிறது.

By admin