• Sat. Jan 24th, 2026

24×7 Live News

Apdin News

டி20 உலகக்கோப்பை: வங்கதேசம் பற்றிய சர்ச்சை குறித்து பாகிஸ்தான், வங்கதேசத்தில் என்ன பேசப்படுகிறது?

Byadmin

Jan 24, 2026


டி20 உலகக்கோப்பை, இந்தியா - வங்கதேசம், பாகிஸ்தான், முஸ்தாபிசுர் ரஹ்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமது நாட்டின் கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்காக இந்தியாவுக்குப் பயணம் செய்யாது என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது (கோப்புப் படம்)

வங்கதேச கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க இந்தியாவுக்குச் செல்லாது என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம்(பிசிபி) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் பிசிபி இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

பாதுகாப்பு காரணங்களைக் கூறி தனது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் பாதுகாப்பு மதிப்பாய்வுக்கு பிறகு ஐசிசி இதனை நிராகரித்துவிட்டது.

வியாழக்கிழமை வங்கதேச இடைக்கால அரசின் விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் கூறுகையில், “ஐசிசியிடம் இருந்து எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எங்களின் பாதுகாப்பு கவலைகளை ஐசிசி பரிசீலிக்கும் என்றும், இலங்கையில் விளையாடும் கோரிக்கையை ஏற்கும் என்றும் நம்புகிறோம்” என்றார்.

மறுபுறம் பிசிபி தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் கூறுகையில், வங்கதேச கிரிக்கெட் குறித்து தாம் பெருமைப்படுவதாகவும், ஆனால் ஐசிசியின் பங்கு கேள்விக்குறியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

By admin