• Sat. Feb 7th, 2026

24×7 Live News

Apdin News

டி20 உலகக்கோப்பை: 20 அணிகள், போட்டி அட்டவணை, விதிமுறைகள் முழு விவரம்

Byadmin

Feb 7, 2026


டி20 உலகக்கோப்பை - முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜோஸ் பட்லர் (இடது), ஜஸ்பிரித் பும்ரா (நடுவில்) டிராவிஸ் ஹெட் (வலது)

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது.

2024-ல் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பட்டம் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இந்தத் தொடருக்குள் நுழைகிறது.

சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாகக் திகழக் கூடிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டி20 கிரிக்கெட்டின் கணிக்க முடியாத தன்மை இந்த தொடரை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடர் பற்றிய முழு விவரமும் இங்கே தரப்பட்டுள்ளன.

டி20 உலகக் கோப்பை-2026 அட்டவணை

டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடரில் பிப்ரவரி 7-ஆம் தேதி கொழும்பு நகரில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

By admin