• Tue. Jan 27th, 2026

24×7 Live News

Apdin News

டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் வெளியேறியதும் இந்தியாவை குறிப்பிட்டு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பேசுவது ஏன்?

Byadmin

Jan 27, 2026


வங்கதேசம் டி20 உலகக் கோப்பையிலிருந்து விலகிய பிறகு, முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் ஏன் இந்தியாவை குறிப்பிடுகின்றனர்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஐசிசியின் முடிவை ஷாஹித் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார். ஷாஹித் அஃப்ரிடி (இடது) மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா (வலது)

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில் இந்தியாவில் போட்டிகளை விளையாட வங்கதேசம் மறுத்தது. இந்த நிலையில் வங்கதேசத்துக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணியை இந்தத் தொடரில் ஐசிசி சேர்ந்துள்ளது.

இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு வெளியில் போட்டிகளை நடத்துமாறு ஐசிசியிடம் வங்கதேசம் கோரிக்கை வைத்திருந்தது. ஐசிசி இந்த வார தொடக்கத்தில் வங்கதேசத்தின் கோரிக்கையை நிராகரித்தது.

வங்கதேசம் தங்களின் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு பதிலாக இலங்கையில் நடத்த வேண்டும் என கோரியிருந்தது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணையில் வங்கதேசத்துக்கு பதிலாக ஸ்காட்லாந்து மாற்றப்பட்டத்தை தொடர்ந்து, ஐசிசியின் முடிவை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிற முக்கிய நபர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படும் இந்த உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடக்கின்றன.

By admin