• Wed. Feb 25th, 2026

24×7 Live News

Apdin News

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளதா?

Byadmin

Feb 25, 2026


தற்போது டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே நிலையில் உள்ளன.

பட மூலாதாரம், Ishara S. KODIKARA/AFP via Getty Images

படக்குறிப்பு, இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தற்போது டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே நிலையில் உள்ளன.

அரை இறுதிக்கு முன்னேற இரு அணிகளும் மற்ற அணிகளின் செயல்பாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

செவ்வாய்க்கிழமையன்று கண்டியில் நடந்த சூப்பர்-8 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

விறுவிறுப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறியது. இதனால், பாகிஸ்தான் அரை இறுதிக்குச் செல்ல இப்போது நியூசிலாந்தைச் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் அதிகபட்சமாக 63 ரன்களையும், பாபர் ஆசம் மற்றும் ஃபகார் சமான் தலா 25 ரன்களையும் எடுத்தனர்.

By admin