• Mon. Mar 30th, 2026

24×7 Live News

Apdin News

டி20 கிரிக்கெட்டில் 550 சிக்சர்கள்: சாதனை படைத்த ரோகித் சர்மா

Byadmin

Mar 30, 2026


ஐ.பி.எல். தொடரின் 2வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. ரகானே 67 ரன்னும், ரகுவன்ஷி 51 ரன்னும் குவித்தனர். மும்பை அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

அடுத்து களமிறங்கிய மும்பை அணி 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரியான் ரிக்கல்டன் 43 பந்தில் 81 ரன்னும், ரோகித் சர்மா 78 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் 550 சிக்சர்களை அடித்துள்ள ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

மேலும், டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்தவர்களின் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்துள்ளார் ரோகித் சர்மா.

இந்திய வீரர்களில் ரோகித் சர்மாவுக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி (440 சிக்சர்) உள்ளார்.

By admin