• Sun. Nov 17th, 2024

24×7 Live News

Apdin News

டீசல் மீது கூடுதல் வரி திட்டத்தை கைவிட ஓபிஎஸ் வலியுறுத்தல் | OPS insists on abandoning additional tax scheme on diesel

Byadmin

Nov 17, 2024


சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அனைத்துத் தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4-ம் குறைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை எண்.504-ல் குறிப்பிடப்பட்டு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 தான் குறைத்தது. டீசல் விலையை குறைக்க வேயில்லை.

இந்தச் சூழ்நிலையில், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களால் ஏற்படும் செலவை ஈடுகட்ட டீசலுக்கு, மத்திய அரசின் பாணியில் கூடுதல்வரி விதிப்பது குறித்து தமிழ்நாடு அரசின் நிதித்துறை அதிகாரிகள் வணிகவரி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டில் டீசல் மீதான கூடுதல் வரியை உயர்த்துவது எந்தவிதத்தில் நியாயம், அரசின் இதுபோன்ற நடவடிக்கை சாமானிய மக்களை வெகுவாக பாதிக்கும். ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். திமுக அரசின் இந்த முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி, டீசல் மீது கூடுதல் வரி விதிக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.



By admin