• Fri. Mar 21st, 2025

24×7 Live News

Apdin News

டீப்சீக்கிடம் கவலைகளை கொட்டித் தீர்க்கும் சீன இளைஞர்கள் – ஒரு செயலியிடம் பரிவை நாடுவது ஏன்?

Byadmin

Mar 20, 2025


Deepseek: மன நல ஆலோசனைக்காக செயற்கை நுண்ணறிவை நாடும் இளைஞர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாதாரணமாக கணினி மற்றும் அல்காரிதம்களிடம் நாம் எதிர்பார்க்காத மன ஆறுதலை செயற்கை நுண்ணறிவிடம் தேடத் தொடங்கியிருக்கிறார்கள் சீன இளைஞர்கள்

தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன், ஹாலி வாங் மனநல ஆலோசனைகளைப் பெற டீப்சீக் செயலிக்குள் நுழைகிறார்.

ஜனவரி மாதம் டீப்சீக் ஆப் பயன்பாடு தொடங்கப்பட்டது முதல், 28 வயதான ஹாலி, தனது மனக் குழப்பங்கள் மற்றும் அண்மையில் நிகழ்ந்த தனது பாட்டியின் இறப்பு உள்ளிட்ட துயரங்களை அந்த சாட்பாட்டிடம் கொட்டி வருகிறார். அதன் பரிவான பதில்கள் அவர் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி சில நேரங்களில் அவரை அழ வைத்துள்ளன.

“டீப்சீக் மிக அற்புதமான மனநல ஆலோசகராக இருந்திருக்கிறது. அது ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்க எனக்கு உதவியாக இருந்திருக்கிறது. நான் பணம் செலுத்தி பயன்படுத்திய மன நல ஆலோசனை சேவையை விட இது சிறப்பாக செயல்பட்டது.” என்கிறார் ஹாலி. அவர் தனது தனியுரிமையை பாதுகாக்கும் பொருட்டு தனது உண்மையான பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அறிக்கைகள், எக்ஸல் ஃபார்முலாக்களை எழுதுவது முதல் பயணங்கள், உடற்பயிற்சியை திட்டமிடுவது மற்றும் புதிய திறன்களை கற்றுக்கொள்வது என, செயற்கை நுண்ணறிவு ஆப்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ளன.

By admin