• Thu. Sep 10th, 2026

24×7 Live News

Apdin News

டுயோ ஐபோன்: மடிக்கக்கூடிய ஐபோனை வெளியிட்ட ஆப்பிள் – 20 ஆண்டுகளில் செய்த பெரிய மாற்றம் கைகொடுக்குமா?

Byadmin

Sep 10, 2026


ஆப்பிளின் மடிக்கக்கூடிய ஐபோன்

பட மூலாதாரம், Apple/courtesy

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஜான் டெர்னஸ் பொறுப்பேற்று இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அதில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மாற்றத்தை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டிம் குக் பதவி விலகியதைத் தொடர்ந்து ஆப்பிளின் தலைமைப் பொறுப்பை ஏற்ற டெர்னஸ், புதன்கிழமை நடைபெற்ற நிறுவனத்தின் ஆண்டுதோறும் நடைபெறும் புதிய தயாரிப்புகள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு, மடிக்கக்கூடிய முதல் ஐபோனின் பிரமாண்டமான படங்களின் முன்பாக அவர் மேடையில் தோன்றினார்.

புத்தகம் போல மடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஐபோனுக்கு ‘டுயோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன்களிலேயே இதுதான் மிகப்பெரியது. அமெரிக்காவில் இதன் ஆரம்ப விலை 1,999 டாலர்கள் ஆகும். அதிகபட்சமாக இதன் விலை 3,200 டாலர்கள் வரை செல்கிறது.

டுயோவின் வடிவமைப்பு “ஐபேடால் ஈர்க்கப்பட்டது” என்று டெர்னஸ் கூறினார். அதேநேரத்தில், அதன் மடிக்கும் வசதி “இயல்பானதாகவும் முற்றிலும் எளிமையானதாகவும்” இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மடிக்கக்கூடிய இந்த ஐபோனை உருவாக்கும் பணி ஆப்பிள் நிறுவனத்துக்குள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

By admin