• Mon. Jan 20th, 2025

24×7 Live News

Apdin News

டெசர்டாஸ் தீவு: தொலைதூர பகுதியில் விடப்பட்ட 1,329 சிறிய ரக நத்தைகள் – ஏன்?

Byadmin

Jan 19, 2025


நத்தைகள்

பட மூலாதாரம், Chester Zoo

படக்குறிப்பு, நத்தைகள் விடுவிக்கப்படுவதற்கு முன்பு ‘வண்ணக் குறியீடு’ அடையாளப் புள்ளிகளால் குறிக்கப்படுகின்றன

அழிவின் விளிம்பில் இருந்த மிகவும் சிறிய வகை நத்தைகள், உயிரியல் பூங்காவில் வைத்து வளர்க்கப்பட்டதை அடுத்து, 1300க்கும் மேற்பட்ட நத்தைகள் தொலைதூரத்தில் உள்ள அட்லாண்டிக் தீவுகளில் விடப்பட்டுள்ளன.

இந்த வகை நத்தைகள் கடந்த நூற்றாண்டில் பார்க்கப்படாததால் இது அழிந்து போனதாக கருதப்பட்டது. ஆனால் இந்த செயல்பாட்டின் மூலம் டெசர்டாஸ் தீவுகளில் இருந்த நிலத்தில் வாழும் இரண்டு வகையான நத்தைகளை மீண்டும் அதன் வாழ்விடத்திற்கே கொண்டுவர முடிந்துள்ளது.

மடியராவுக்கு அருகில் உள்ள டெசர்டாஸ் தீவுகளில், சிறிய அளவிலான இந்த நத்தைகளை பார்த்த வன பாதுகாப்பாளர்கள் இவைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கொண்டுவரப்பட்ட நத்தைகள் பிரிட்டனின் செஸ்டர் உயிரியல் பூங்கா மற்றும் பிரான்சில் உள்ள உயிரியல் பூங்காக்களில், பாதுகாப்பாக வைக்கப்பட்டன.



By admin