• Thu. Sep 4th, 2025

24×7 Live News

Apdin News

டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது – அன்பில் மகேஸ் | Anbil Mahesh says tn govt will never abandon teachers

Byadmin

Sep 3, 2025


திருச்சி: ஆசிரியர் தகு​தித் தேர்வு விவ​காரத்​தில், ஆசிரியர்​களை தமிழக அரசு எக்​காரணம் கொண்​டும் கைவி​டாது என தமிழக பள்ளிக் கல்​வித்துறை அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி தெரி​வித்​தார்.

தமிழகம் முழு​வதும் 20 அரசு உயர்​நிலைப் பள்​ளி​கள், மேல்​நிலைப் பள்​ளி​களாக அண்​மை​யில் தரம் உயர்த்​தப்​பட்​டன. இதில், திருச்சி கே.கே. நகரில் உள்ள அரசு உயர்​நிலைப் பள்​ளி​யும் ஒன்​று. இந்​நிலை​யில், இப்​பள்​ளி​யில் அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்யாமொழி வகுப்​பு​களை நேற்று தொடங்கி வைத்​து, பள்​ளி​யில் சேர்ந்த மாணவர்​களை வரவேற்​று புத்​தகம், பேனா ஆகியவற்றை வழங்​கி​னார்.

பின்​னர், அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்​யாமொழி செய்​தி​யாளர்​களிடம் கூறியது: தற்​போது பணி​யில் உள்ள ஆசிரியர்​கள், டெட் எனப்​படும் ஆசிரியர் தகு​தித் தேர்வை எழுதி கட்​டா​யம் தேர்ச்சி பெற வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்​பின் விவரம் முழு​மை​யாக கிடைத்​தவுடன் அதுகுறித்து சட்ட வல்​லுநர்​களு​டன் கலந்து ஆலோ​சித்​து, பின்​னர் மேல் முறை​யீடு செய்​யப்​படும்.

உச்ச நீதி​மன்ற தீர்ப்பு தொடர்​பாக ஆசிரியர் சங்​கங்​களும் மேல் ​முறை​யீடு செய்ய வாய்ப்​புள்​ளது. அதேவேளை​யி்ல், எக்​காரணத்​தைக் கொண்​டும் ஆசிரியர்​களை தமிழக அரசு கைவி​டாது. இவ்​வாறு அவர் கூறி​னார். நிகழ்ச்​சி​யில், எம்​எல்ஏ இனிகோ இருதய​ராஜ், மாநக​ராட்சி மண்டல குழுத் தலை​வர் மு.ம​தி​வாணன், பள்​ளித் தலைமை ஆசிரியை எலிசபெத் ராணி மற்​றும் ஆசிரியர்​கள், பெற்​றோர்​ பங்​கேற்​றனர்​



By admin