• Thu. Nov 13th, 2025

24×7 Live News

Apdin News

டெல்டா மாவட்டங்களில் நவ.17, 18-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் | chance for heavy rain in delta on november 17 and 18 imd weather report

Byadmin

Nov 13, 2025


சென்னை: டெல்​டா ​மாவட்​டங்​களில்​ நவ.17, 18-ம்​ தே​தி​களில்​ க​னமழைக்​கு வாய்​ப்​பு இருப்​ப​தாக சென்னை வானிலை ஆய்​வு மை​யம்​ தெரிவித்துள்ளது.

இதுகுறித்​து மைய aஇயக்​குநர்​ ​பா.செந்​தாமரை கண்​ணன்​ வெளி​யிட்​ட செய்​தி​க்​குறிப்​பு: தென்​மேற்​கு, தென்​கிழக்​கு வங்​கக்​கடல்​ பகு​தி​களின்​ மேல்​ ஒரு வளிமண்​டல கீழடு​க்​கு சுழற்​சி நில​வுகிறது. இதன்​ ​காரண​மாக, தமிழகத்​தில்​ ஓரிரு இடங்​களி​லும்​, புதுச்​சேரி, ​காரைக்​கால்​ பகு​தி​களி​லும்​ இன்​று (நவ.13) ​முதல்​ 17-ம்​ தே​தி வரை லே​சானது ​முதல்​ மிதமான மழை பெய்​யக்​கூடும்​.

17-ம்​ தே​தி தஞ்​சாவூர்​, ​திரு​வாரூர்​, ​நாகப்​பட்​டினம்​, மயி​லாடு​துறை, கடலூர்​, ​விழுப்​புரம்​, செங்​கல்​பட்​டு, கள்​ளக்​குறிச்​சி ​மாவட்​டங்​களில்​ ஓரிரு இடங்​களி​லும்​, புதுச்​சேரி, ​காரைக்​கால்​ பகு​தி​களி​லும்​ க​னமழை பெய்​ய ​வாய்​ப்​பு உள்​ளது. 18-ம்​ தே​தி தஞ்​சாவூர்​, ​திரு​வாரூர்​, நாகப்​பட்​டினம்​, மயி​லாடு​துறை, புதுக்​கோட்​டை, ​ராம​நாத​புரம்​ ​மாவட்​டங்​கள்​, ​காரைக்​கால்​ பகு​தி​களில்​ க​னமழை பெய்​ய ​வாய்​ப்​பு உள்​ளது.

சென்​னை மற்​றும்​ புறநகர்​ பகு​தி​களில்​ இன்​று வானம்​ மேக மூட்​டத்​துடன்​ ​காணப்​படும். தென்​ தமிழக கடலோரம்,​ மன்னார்​ வளை​குடா, குமரி​க்கடல்​ பகு​தி​களில்​ இன்​றும்​, நாளை​யும் சூறாவளி​க்​ ​காற்​று வீசக்​கூடும்​ என்​ப​தால்​ மீனவர்​கள்​ செல்​ல வேண்​டா​ம்​.



By admin