• Thu. Sep 4th, 2025

24×7 Live News

Apdin News

டெல்லியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்: தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களை களைய அமித் ஷா அறிவுறுத்தல் | Amit Shah instructs to resolve internal party disputes as elections approach

Byadmin

Sep 4, 2025


சென்னை: டெல்​லி​யில் பாஜக உயர்​மட்ட குழுக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தேர்​தல் நெருங்​கு​வ​தால் உட்​கட்சி பூசல்​களை உடனடி​யாக களைய வேண்​டும் என்று தமிழக பாஜக தலை​வர்​களுக்கு அமித் ஷா அறி​வுறுத்​தி​யுள்​ளார். தமிழக பாஜக​வில் உட்​கட்சி பூசல், கூட்​டணி ஒருங்​கிணைப்​பு, 2026 சட்​டப்​பேரவை தேர்​தல் உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து ஆராய டெல்​லி​யில் உயர்​மட்​டக் குழுக் கூட்​டம் உள்​துறை அமைச்​சர் அமத் ஷா வீட்​டில் நேற்று நடை​பெற்​றது.

இதில் மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மாநில பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்​.​ராஜா, எல்​.​முரு​கன், வானதி சீனி​வாசன், சரஸ்​வ​தி, நாராயணன் திருப்​பதி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். முன்​னாள் மாநில தலை​வர் அண்​ணா​மலை பங்​கேற்​க​வில்​லை.

அமித் ஷா தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில் தேசிய தலை​வர் ஜே.பி.நட்​டா, தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ் உள்​ளிட்​டோரும் பங்​கேற்​றனர். சுமார் இரண்​டரை மணி நேரம் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில், 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நில​வரம் குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. கூட்​ட​ணி​யில் அதி​முக, பாஜக மட்​டுமே இடம்​பெற்​றிருக்​கும் நிலை​யில், மேலும் பல கட்​சிகளை இணைத்து மெகா கூட்​ட​ணி​யாக அமைக்​கும் வகை​யில், கூட்​டணி வியூ​கத்தை மாற்றி அமைப்​ப​தற்​கான ஆலோ​சனை​களை அமித் ஷாவும், ஜே.பி.​நாட்​டா​வும் வழங்கி உள்​ளனர்.

மேலும், 234 தொகு​தி​களுக்​கும் பாஜக பொறுப்​பாளர்​களை நியமிப்​பது, தமிழகத்​தில் வெற்றி பெறு​வதற்கு சாதக​மான சட்​டப்​பேர​வைத் தொகு​தி​கள், அதி​முக​வுட​னான தொகுதி பங்​கீடு முரண்​பாடு​கள், வாக்கு வங்​கியை அதி​கரிப்​பது, குறிப்​பாக, மேற்கு மண்​டலத்​தில் கவுண்​டர் சமு​தாய வாக்​கு​களை முழு​மை​யாக பெறு​வது, தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கு​வது உள்​ளிட்ட பல்​வேறு விஷ​யங்​கள் ஆலோ​சிக்​கப்​பட்​டன.

மேலும், மாநில கட்சி நிர்​வாகி​களுக்​குள் நில​வும் உட்​கட்சி பூசல்​களை உடனடி​யாக களைய வேண்​டும் என கூட்​டத்​தில் அமித் ஷா அறி​வுறுத்​தி​ய​தாக தெரி​கிறது. குறிப்​பாக, தமிழக பாஜக​வில் அணி அணி​யாக பிரிந்து நிற்​காமல், அனை​வரும் ஒற்​றுமை​யாக இணைந்து தேர்​தலை சந்​திக்க வேண்​டும் எனவும் அமித் ஷா அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

அது​மட்​டுமில்​லாமல், குடியரசுத் துணைத் தலை​வர் வேட்​பாளர் சி.பி.​ரா​தாகிருஷ்ணனுக்கு தமிழகம் முழு​வதும் பேனர்​கள் வைப்​பதுடன், கூட்​டங்​கள் நடத்தி அவரை முன்​னிலைப்​படுத்த வேண்​டும் என்​றும் அறி​வுறுத்​தல்​கள் வழங்​கப்​பட்​டுள்​ள​தாக டெல்​லி வட்டாரங்​கள்​ தெரிவித்​தன.



By admin